Home One Line P1 குண்டர் கும்பல்: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் ஐவர் கைது

குண்டர் கும்பல்: பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் ஐவர் கைது

632
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குண்டர் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் சின்னத்தை, இறுதி ஊர்வலத்தின் போது, பல்நோக்கு வாகனத்தின் (எம்.பி.வி) முன்புறத்தில் பயன்படுத்தியதற்காக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

நேற்று இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள ஐந்து தனித்தனி இடங்களில் 18 முதல் 26 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் அனுவார் ஒமர் தெரிவித்தார்.

நேற்று, இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடித்து பொது இடத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்திய காணொலி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் இறந்த 28 வயது இளைஞனின் இறுதி சடங்கின் போது இது பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்த சோதனையில் டொயோட்டா வெல்பயர், டொயோட்டா கேம்ரி மற்றும் ஹோண்டா சிவிக், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 36 எண் வடிவிலான பூச்செண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.