Home நாடு தடைகளைத் தாண்டி ‘தண்டா புத்ரா’ பினாங்கில் திரையிடப்படும் – பல்லூடக அமைச்சர் கருத்து

தடைகளைத் தாண்டி ‘தண்டா புத்ரா’ பினாங்கில் திரையிடப்படும் – பல்லூடக அமைச்சர் கருத்து

586
0
SHARE
Ad

tanda-putera-thumbnailகோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படம் உணர்வுகளைத் தூண்டக்கூடியது என்று பலர் கூறினாலும், எதிர்ப்புகளையும் தாண்டி பினாங்கு மாநிலத்தில் திரையிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சுகைமி பாபா இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் வரும் சனிக்கிழமை பினாங்கு மாநில திரையரங்குகளில் திரையிடப்படும் என்று தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அகமட் ஷாபெரி சீக் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக ஹுசைன் மற்றும் துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும் மே 13 இனவாத சம்பவங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பினாங்கில் திட்டமிட்டபடி தண்டா புத்ரா திரைப்படம் திரையிடப்படுவதை உறுதி செய்யுமாறு மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு (Malaysian National Film Development Corporation )  ஆணையிடப்பட்டுள்ளதாக அகமட் ஷாப்ரி தனது முகநூல் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பினாங்கு அரசாங்கம் இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று அம்மாநில திரையரங்குகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.