Home உலகம் பிலிப்பைன்ஸ் அதிபரின் சீனா பயணம் ரத்து

பிலிப்பைன்ஸ் அதிபரின் சீனா பயணம் ரத்து

651
0
SHARE
Ad

பீஜிங், ஆகஸ்ட் 31- வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி, சீனாவின் நான்ஜிங் நகரில் சீனா-தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.

aquino1இதில், கவுரவ உறுப்பினராக பிலிப்பைன்ஸ் நாடு உள்ளதால், அந்நாட்டின் அதிபர் பெநிக்னோ அக்வினோ (படம்) இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக சென்ற புதன்கிழமை அன்று அறிவித்திருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவின் முக்கியத்துவம் குறித்து அப்போது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

ஆயினும், தென் சீனக் கடலில் உள்ள தீவுகளின் உரிமை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால் பிலிப்பைன்ஸ் அதிபர் தற்போது தங்கள் நாட்டுக்கு வருவதை ஒத்திப்போடலாம் என்று சீன அரசு கருதியதாகத் தெரிகின்றது.

இந்தத் தீவுகள் குறித்த சர்ச்சையில், அமெரிக்கா சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அளித்துள்ள உத்தரவாதங்கள் சீனாவை எரிச்சலூட்டியுள்ளது.

எனவே, அதிபர் பெநிக்னோ அக்விநோவின் சீனப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீன அரசின் எண்ணத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்சின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரால் ஹெர்னாண்டஸ் கூறினார்.

பிலிப்பைன்ஸ் அதிபரின் பயணம் ரத்தானது குறித்து சீன அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.