திருவனந்தபுரம், செப். 2– கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயி. இவர் கொல்லத்தில் அமிர்த புரி என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மாதா அமிர்தானந்தமயின் 60–வது பிறந்தநாள் வருகிற 26–ந்தேதி வருகிறது. இதையொட்டி 26 மற்றும் 27–ந்தேதி ஆகிய 2 நாட்கள் “அமிர்த வருஷம்–60” என்ற பெயரில் அவரது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி 26–ந்தேதி 6 லட்சம் பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி தொடங்கி வைக்கிறார்.
பல மொழிகளிலும் பக்தி பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகளை மாதா அமிர்தானந்தமயி ஆசிரம அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.