Home கலை உலகம் 25 ஆண்டுகளில் மிகச்சிறந்த இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்

25 ஆண்டுகளில் மிகச்சிறந்த இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்

645
0
SHARE
Ad

செப். 2- என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளி விழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச்சிறந்த 25 மனிதர்கள் யார்? என்று நாடு தழுவிய ஒரு கருத்துக்கணிப்பை இணையதளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம்.

rajnikanth-pictures-080இந்த பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச்சிறந்த 25 பேர் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலிடம் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 2-வது இடத்திலும், அப்துல் கலாம் 3-வது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஆன்லைனில் வெளியாகும் நேரடியான கருத்துக்கணிப்பு என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் 6.99 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10-வது இடமும், ஷாரூக்கானுக்கு 13-வது இடமும் கிடைத்துள்ளன.