Home கலை உலகம் நல்லகதை அமைந்தால் தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்: ஸ்ரேயா

நல்லகதை அமைந்தால் தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்: ஸ்ரேயா

897
0
SHARE
Ad

செப். 4- ஸ்ரேயாவை தமிழ் படங்களில் கண்டு நெடுநாள் ஆகிவிட்டது.

கடைசியாக ஜீவாவுடன் ‘ரௌத்திரம்’ படத்தில் நடித்தார். 2011-ல் இப்படம் வந்தது. அதன் பிறகு விக்ரமுடன் ராஜபாட்டையில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு போனார்.

Shriya-Saran-Wallpapers-2013-1கன்னடத்தில் ஸ்ரேயா நடித்த ‘சந்திரா’ படம் சில மாதங்களுக்கு முன் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

ரஜினி, விஜய், விக்ரம், விஷால், தனுஷ் என முன்னணி கதாநாயகர்களுக்கு  ஜோடியாக வந்த அவர் தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இன்னொரு புறம் புதுமுக நடிகைகள் வரத்தும் ஸ்ரேயாவை ஓரம் கட்ட வைத்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது:-

நான் சினிமாவுக்கு வந்து பதிமூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி.

சினிமாவில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நிறைய நடித்துவிட்டேன்.

shriya_hdதமிழில் சில காலம் இடைவெளி விழுந்துவிட்டது. நல்ல கதைக்காக காத்து இருக்கிறேன்.

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தால் தமிழில் மீண்டும் நடிப்பேன். நிறைய படங்களில் நடிப்பது முக்கியமல்ல.

என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதுபோன்ற கதைகளை தேடுகிறேன்.