Home வணிகம்/தொழில் நுட்பம் செப்டம்பர் 11 ம் தேதி சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக ஐபோன் நிகழ்வு!

செப்டம்பர் 11 ம் தேதி சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக ஐபோன் நிகழ்வு!

599
0
SHARE
Ad

invite-130903

கோலாலம்பூர், செப்டம்பர் 5 – வரும் செப்டம்பர் 10 ம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தலைமுறை ஐபோன்களை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், அதற்கு அடுத்தநாள் செப்டம்பர் 11 ம் தேதி சீனாவில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு சந்திப்பில், சீனாவின் பல்வேறு முக்கிய ஊடகங்கள் பங்கேற்கவுள்ளன.

#TamilSchoolmychoice

சீனாவில் இந்த பிரத்யேக அறிமுக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கான காரணம், தற்போது ஆப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிடவுள்ள குறைந்த விலை ஐபோன் 5சி வகை மாடல் ஆகும்.

ஐபோன் 5 சி, விலை மலிவான பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வகை ஐபோன் சீன சந்தையில் மிகவும் பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.