செப். 5- ஐஸ்வர்யா ராய்- சல்மான்கான் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையத்தளத்தில் திடீர் என்று பரவியுள்ளன.
இவற்றை வெளியிட்டது யார் என தெரியவில்லை. இதனால் ஐஸ்வர்யாராய் அதிர்ச்சியாகியுள்ளார்.
ஐஸ்வர்யா ராயும் சல்மான்கானும் பழைய காதலர்கள்.
ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். சல்மான்கான் இரவு நேரங்களில் ஐஸ்வர்யாராய் வீட்டுக்கு சென்று கதவை தட்டி தகராறு செய்ததெல்லாம் அப்போது செய்திகளாக வெளிவந்தன.
பிறகு ஐஸ்வர்யாராய் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தார்.
பின்னர் திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு பெண் குழந்தையொன்றும் இருக்கிறது. இந்த நிலையில்தான் சல்மான்கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.