Home வாழ் நலம் கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய் !

கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய் !

1566
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப். 5- கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய்!

மலிவான விலையில் நிறைய ஊட்டசத்துகளை தருவது அவரை. புரதம் சுண்ணாம்புசத்து, இரும்பு, வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

IMG_2335மிக எளிதில் செரிமானமாகக் கூடியது. அவரை பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்தில் பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைகாயை விட அவரை பிஞ்சே உடலுக்கு நல்லது.

#TamilSchoolmychoice

வெண்ணிற அவரைகாய் வாயு பித்தம் இவற்றை கண்டிக்கும்,உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும் எரிச்சலை அடக்கும்.

நீரிழிவு நோய் பேதி தொல்லை,அடிக்கடி தலை நோய் வருதல் ஜிரணக்கோளாறு,சீதபேதி,இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுன்டு.

அஸ்ஸாமில் காது வலிக்கும்,தொண்டை வலிக்கும்,அவரைகாயின் சாறைப் பயன்படுத்துகின்றனர்.

இரத்த கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது அறிய கண்டுபிடிப்பு.

எனவே, அவரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்!