Home இந்தியா தாலிக்கு தங்கம் பற்றி விமர்சனம்: பிரேமலதா மீது அவதூறு வழக்கு

தாலிக்கு தங்கம் பற்றி விமர்சனம்: பிரேமலதா மீது அவதூறு வழக்கு

650
0
SHARE
Ad

சென்னை, செப். 5– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ArunPandian_daughter_Kavitha_wedding(3)சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நிதிமன்றத்தில்  முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில் வக்கீல் ஜெகன் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–

13.3.2013 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார்.

#TamilSchoolmychoice

அப்போது அவர், ‘தாலிக்கு தங்கம் கொடுத்து பெண்களின் தாலியை பறிக்கும் அவல ஆட்சி நடக்கிறது’ என்று பேசினார்.

இது முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதும் தமிழக அரசு மீதும் பொது மக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.

எனவே, பிரேமலதாவின்  அவதூறு நடவடிக்கை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.