Home Featured தமிழ் நாடு அதர்மத்திற்கும்-தர்மத்திற்கும் மீண்டும் போர் – பிரேமலதா ஆவேசப் பிரச்சாரம்!

அதர்மத்திற்கும்-தர்மத்திற்கும் மீண்டும் போர் – பிரேமலதா ஆவேசப் பிரச்சாரம்!

709
0
SHARE
Ad

premalathaநெல்லை – 50 ஆண்டுகால தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என்று தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி சார்பாக பிரேமலதா விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தே.மு.தி.க. மக்கள்நலக்கூட்டணி மாபெரும் வெற்றிக்கூட்டணி. முதலமைச்சராக விஜயகாந்த் வரவேண்டும் என்று அவரது தலைமையில் உருவான இந்த கூட்டணி, புதிய சரித்திரத்தை உருவாக்க வேண்டும்.

50 ஆண்டுகால தி.மு.க. – அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை. தமிழக மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தெருவுக்கு தெரு மதுக் கடையை திறந்துள்ளனர். அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் மீண்டும் போர் ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தர்மம் வெல்ல நீங்கள் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். நாங்கள் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் கிரானைட் குவாரிகள் மூடப்படும்.

இளைஞர்கள், தாய்குலங்கள் ஒன்றிணைந்து எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். எனவே வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தியது போல கொள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தி வருகிறோம்.

எனவே தி.மு.க. – அ.தி.மு.க.விற்கு சவுக்கடி கொடுக்கும் வெற்றி அணியாக இதை மாற்றுங்கள், இதுவரை ஆண்ட வயதானவர்கள் வீட்டிற்கு போகட்டும். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் வரலாறு படைக்கட்டும் என பிரேமலதா கூறினார்.