Home Featured கலையுலகம் பனாமா விவகாரத்தில் கருத்து கூற ஐஸ்வர்யா ராய் மறுப்பு!

பனாமா விவகாரத்தில் கருத்து கூற ஐஸ்வர்யா ராய் மறுப்பு!

840
0
SHARE
Ad

aiswaryaமும்பை – பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத கருப்பு பணத்தை மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோரது பெயரும் அடிபட்டது. இந்த குற்றச்சாட்டை அமிதாப்பச்சன் திட்டவட்டமாக மறுத்தார். இந்த நிலையில், நேற்று மும்பையில் ‘சரப்ஜித்’ என்ற இந்தி பட முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை ஐஸ்வர்யா ராயிடம், இதுபற்றி நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு கருத்து கூற மறுத்த அவர், ‘‘இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன். அதை பற்றி உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்’’ என்றார். அந்த அறிக்கை பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? நீங்கள் மட்டும் தான் இப்படி கேள்வி கேட்கிறீர்கள்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டார் ஐஸ்வர்யா ராய்.