Home நாடு குண்டர் கும்பல் தலைவர்களின் பட்டியலை காவல்துறை வெளியிடவில்லை – கூ சின் வா அதிர்ச்சி தகவல்

குண்டர் கும்பல் தலைவர்களின் பட்டியலை காவல்துறை வெளியிடவில்லை – கூ சின் வா அதிர்ச்சி தகவல்

691
0
SHARE
Ad

datuk-ku-chin-wahகோலாலம்பூர், செப் 10 – குண்டர் கும்பல் தலைவர்கள் என்று கூறப்படும் சுமார் 40 நபர்களின் பெயர்கள் கடந்த சனிக்கிழமை பத்திரிக்கைகளில் வெளியானது. ஆனால் இந்த பட்டியலை காவல்துறை தாங்கள் வெளியிடவில்லை என்று மறுத்துள்ளது.

இது குறித்து கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ கூ சின் வா நேற்று வெளியிட்ட அறிக்கையில், அந்த பெயர் பட்டியல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்த பட்டியல் எங்களிடமிருந்து வரவில்லை என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த பட்டியலை காவல்துறை வெளியிடவில்லை என்று கூறும் இரண்டாவது காவல்துறை உயர் அதிகாரி இவராவார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே புக்கிட் அமான் சூதாட்டம், விபச்சாரம், குண்டர் கும்பல் ஒழிப்புத்துறை உதவி இயக்குநர் அப்துல் ஜாலில் அசான் அந்த பட்டியல் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியிருந்தார்.

இதனிடையே குண்டர் கும்பல் உறுப்பினர்களை கைது செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் கீழ் 5,505 பேர் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் சாலே கூறினார்.

ஓப்ஸ் கந்தாஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது முதல் 10,126 பேர் சோதனை செய்யப்பட்டனர். 5,764 வாகனங்களும் சோதனையிடப்பட்டன.பல்வேறு குற்றங்களுக்காக 502 பேர் கைது செய்யப்பட்டனர் என்று முகமட் சாலே தெரிவித்தார்.