நாட்டின் முன்னணிப் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும் குண்டர் கும்பலுடன் என் பெயரையும் இணைத்து செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தச் செய்தியைக் கண்டு அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், நண்பர்கள் ஆகியோர் என்னை அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த செய்தியால் என் தன்மானத்திற்கு மிகுந்த இழுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நான் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறேன். இந்த பிரச்சனை குறித்து உள்துறை அமைச்சு, காவல்துறை ஆகியவற்றோடு நான் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்.
கோபி கிருஷ்ணன் என்பவர் என்னை ஒரு குண்டர் கும்பலைச் சேர்ந்தவன் என்று கூறி பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டுள்ளார். இது என்னை அவமானப்படுத்தும் செயலாகும். எனவே, காவல்துறை இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று காஜாங் காவல்நிலையத்தில் கலையரசன் புகார் அளித்துள்ளார்.