Home உலகம் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக தாமஸ் பேச் தேர்வு

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் புதிய தலைவராக தாமஸ் பேச் தேர்வு

488
0
SHARE
Ad

பியூனஸ் அயர்ஸ், செப். 11-  சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் (ஐ.ஓ.சி.) 125-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் 4 நாட்கள் நடந்தது.

கடைசி நாளான நேற்று, உலக விளையாட்டு அரங்கில் மிகவும் அதிகாரம் படைத்த பதவியான ஐ.ஓ.சி.யின் புதிய தலைவருக்கான தேர்தல் நடந்தது.

thomas-bach-130509கடந்த 12 ஆண்டுகளாக தலைவராக இருந்த பெல்ஜியத்தின் ஜேக்ஸ் ரோச்சின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து தலைவர் பதவிக்கு தாமஸ் பேச் (ஜெர்மனி), செர் மியாங் (சிங்கப்பூர்), ரிச்சர்ட் கேரியான் (பியுர்டோ ரிக்கோ), வு சிங்-கு (சீனத்தைபே), டெனிஸ் ஓஸ்வால்டு (சுவிட்சர்லாந்து), செர்ஜி புக்கா (உக்ரைன்) ஆகிய 6 பேர் போட்டியிட்டனர். புதிய தலைவரை தேர்வு செய்ய ஐ.ஓ.சி. உறுப்பினர்கள்  வாக்களித்தனர்.

#TamilSchoolmychoice

2-வது சுற்று  வாக்கெடுப்பு முடிவில் ஜெர்மனியின் தாமஸ் பேச் 49 வாக்குகள் பெற்று புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக ரிச்சர்ட் கேரியானுக்கு 29 வாக்குகள் கிடைத்தன.

ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான தாமஸ் பேச், 1976-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வாள்சண்டை போட்டியின் பாயில் அணிகள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர்.

ஒலிம்பிக்கிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர், ஐ.ஓ.சி.யின் தலைவர் ஆவது இதுவே முதல் முறையாகும்.