Home அரசியல் தேசிய துணைத்தலைவர் பதவிக்கு சுப்ரா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – பழனிவேல் விருப்பம்

தேசிய துணைத்தலைவர் பதவிக்கு சுப்ரா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் – பழனிவேல் விருப்பம்

479
0
SHARE
Ad

subra-and-palaniகோலாலம்பூர், செப் 12 – கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான நியமனத் தாக்கலில், 617 கிளைத்தலைவர்களின் ஆதரவோடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு தன்னை போல் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் தனது விருப்பத்திற்கான காரணத்தை பழனிவேல் கூறவில்லை. எனவே இது பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனினும், கட்சியின் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை பழனிவேல் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“எத்தனை பேர் உதவித்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயம் 3 பேருக்கு மேல் போட்டியிடுவார்கள்” என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் பழனிவேல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தேசிய உதவித்தலைவர் பதவிக்கு நடப்பு உதவித் தலைவர்களான டத்தோ சரவணனும், பேராக் மாநில சபாநாயகர் டத்தோ எஸ்.கே. தேவமணியும் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்கள்.

அதே நேரத்தில், பழனிவேலால் ம.இ.கா மத்திய செயற்குழுவில் இருந்து அண்மையில் நீக்கம் செய்யப்பட்ட ம.இ.கா வியூக இயக்குநர் வேள்பாரியும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.