Home நாடு வான் முகமட் அஸ்ரி தான் சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகோமோ- நீதிமன்றம் தீர்ப்பு

வான் முகமட் அஸ்ரி தான் சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் பபகோமோ- நீதிமன்றம் தீர்ப்பு

778
0
SHARE
Ad

Blogger Papagomoகோலாலம்பூர், செப் 13 – முன்னாள் காவல்துறை அதிகாரியான வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் தான் சர்ச்சைக்குரிய வலைப்பதிவாளர் ‘பபகோமோ’ என்று நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்கில் அவருக்கு 500,000 ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் பபகோமோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இன்னும் பல அவதூறு வழக்குகள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் தான் ‘பபகோமோ’ வலைப்பதிவாளர் இல்லை என்று வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

‘பபகோமோ’ விற்கு எதிராக தொழிலதிபர் அப்துல் ரசாக் முகமட் நோர் என்பவர் தாக்கல் செய்திருந்த 10 மில்லியனுக்கான இந்த அவதூறு வழக்கில் நீதித்துறை ஆணையர் வசீர் ஆலம் மைதீன் மீரா இன்று தீர்ப்பளித்தார்.

பொது நஷ்ட ஈடாக 200,000 ரிங்கிட்டும், கூடுதல் சிறப்பு நஷ்ட ஈடாக  300,000 ரிங்கிட்டும் பபகோமோ வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதவிர, 50,000 ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

காமென்வெல்த் விளையாட்டு மூலம் தொழிலதிபர் அப்துல் ரசாக் பல மில்லியன் ரிங்கிட் சம்பாதித்ததாக தனது வலைத்தளத்தில் பபகோமோ கருத்து தெரிவித்திருந்ததால் அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.