Home கலை உலகம் “யுவாஜியின் வெள்ளைப்புறா” நாவல் அக்டோபரில் சிறகை விரிக்கிறது!

“யுவாஜியின் வெள்ளைப்புறா” நாவல் அக்டோபரில் சிறகை விரிக்கிறது!

797
0
SHARE
Ad

IMG_9349 - Copyகோலாலம்பூர், செப் 17 – மலேசியாவின் பிரபல பாடலாசிரியர் யுவாஜியின் முதல் நாவலான “யுவாஜியின் வெள்ளைப் புறா” குறித்த செய்தியாளர்கள் கூட்டம் கடந்த ஞாயிறு மாலை கோலாலம்பூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாவல் வெளியிடும் தேதி குறித்த அறிவிப்பும், அழைப்பிதழ்களும் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் சத்யா இசையில், தான் முதன் முதலாக எழுதிய வெள்ளைப்புறா என்ற பாடலை மையமாக வைத்தும், அதன் பின்னர் தனது வாழ்க்கையில் நடந்த பல சுவையான சம்பவங்களையும், காதல், கற்பனை, கவிதை என அதற்கு மெருகூட்டி இந்த நாவலைப் படைத்திருப்பதாக பாடலாசிரியர் யுவாஜி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்நாவலை வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி, கோலாலம்பூரிலுள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில், மதியம் 1 மணியளவில் மெர்ப் பதிப்பகம் வெளியிடுகிறது.

இந்நிகழ்வில் மலேசியக் கலைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று மெர்ப் பதிப்பகத்தின் உரிமையாளரான பிரேம் நாத் தெரிவித்தார்.IMG_9340

மேலும், மலேசிய கலைத்துறையில் பல வெற்றிப்பாடல்களை எழுதிய யுவாஜியின் முதல் நாவலை தாங்கள் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக மெர்ப் பதிப்பகத்தின் நிர்வாகியான நந்தினி தெரிவித்தார்.

மலேசிய கலையுலகில் கடந்த பத்து வருடங்களாக 100 க்கும் மேற்பட்ட வெற்றிப் பாடல்களை எழுதியவர் யுவாஜி. தற்போது வெளிவரக் காத்திருக்கும் மலேசியப் படங்களான வெண்ணிற இரவுகள், வெட்டிப் பசங்க, மெல்லத் திறந்தது கதவு போன்றவற்றில் பாடல்கள் எழுதி அவை தற்போது மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளன.

அத்துடன் மலாய் பாடகர்களான சலாம் குழுவினரின் ‘அழகு’ என்ற தமிழ் ஆல்பத்தில் யுவாஜி வரிகள் கோர்த்து, பாடல் உருவாவதற்கும் துணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.