Home நாடு லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாள்: ராணி எலிசபெத் உட்பட உலகின் பல தலைவர்கள்...

லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாள்: ராணி எலிசபெத் உட்பட உலகின் பல தலைவர்கள் வாழ்த்து!

1037
0
SHARE
Ad

Elizabethகோலாலம்பூர், செப் 18 – கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாளையொட்டி இங்கிலாந்து ராணி எலிசபெத் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி எலிசபெத் அவர்களின் வாழ்த்து இரு நாட்டு மூத்த தலைவர்களின் ஆழமான நட்பையும், பாசத்தையும் காட்டுகிறது. அதோடு சிங்கப்பூருக்கும், இங்கிலாந்துக்குமிடையே இருக்கும் நட்புறவையும் முன்னிருத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஜெர்மன் அதிபர் ஆஞ்செலா மெர்கல் மற்றும் சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் லி லான்சிங் உட்பட உலகில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் லீ குவான் இயூவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த 1923 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவரான லீ குவான் இயூ, நவீன சிங்கப்பூரின் சிற்பி என்றும், சிங்கப்பூரின் தந்தை என்றும் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறார்.