Home அரசியல் அம்னோ கட்சித் தேர்தல்: தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கு முக்ரிஸ் உட்பட 6 பேர் வேட்புமனுத் தாக்கல்!

அம்னோ கட்சித் தேர்தல்: தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கு முக்ரிஸ் உட்பட 6 பேர் வேட்புமனுத் தாக்கல்!

489
0
SHARE
Ad

MUKHRIZகோலாலம்பூர், செப் 21 – இன்று நடைபெற்ற அம்னோ உச்ச மன்ற பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கலில் தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கு  6 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

நடப்பு உதவித்தலைவர்களான டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி, டத்தோஸ்ரீ ஹிசாமுடின் ஹுசைன் மற்றும் டத்தோஸ்ரீ சஃபி அப்டால் ஆகியோருடன், கெடா மந்திரி பெசார் டத்தோ முக்ரிஸ் மகாதீர், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் டான்ஸ்ரீ அலி ருஷ்டாம் மற்றும் முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டான்ஸ்ரீ இஷா சமத் ஆகிய மூவரும் உதவித்தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

கட்சியின் பல்வேறு பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த 72 மணி நேரங்கள் கழித்து அதாவது வரும் செவ்வாய் கிழமை அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice