Home நாடு அம்னோ உதவித் தலைவர்கள் : இஸ்மாயில் சப்ரி யாக்கோப்; மகாட்சிர் காலிட்

அம்னோ உதவித் தலைவர்கள் : இஸ்மாயில் சப்ரி யாக்கோப்; மகாட்சிர் காலிட்

1173
0
SHARE
Ad
இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசிய உதவித் தலைவர்களாக முன்னாள் அமைச்சர்கள் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மாட்சிர் காலிட் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர்.

மூன்றாவது உதவித் தலைவருக்கான தேர்வில் முன்னாள் இரண்டாவது நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி மற்றும் ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் காலிட் நோர்டின் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது.

மாட்சிர் காலிட்

இவர்களில் வெற்றி பெற்றவர் யார் என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் அம்னோவின் தேசியத் தலைவராக அகமட் சாஹிட் ஹமிடி வெற்றி பெற்றார்.

துணைத் தலைவராக நெகிரி மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான் வெற்றி பெற்றுள்ளார்.