Home நாடு சாஹிட் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

சாஹிட் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

1386
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோ தலைவராக நேற்று நடந்த கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், சாஹிட் ஹமிடிக்கு முதல் கட்டப் பணிகளோடு, இன்னொரு கோணத்தில் முதல் கட்டப் பிரச்சனையும் முளைத்திருக்கிறது.

அறவாரியம் ஒன்றின் நிதிகள் கையாளப்பட்ட விவகாரத்தில் அவரை ஊழல் தடுப்பு ஆணையம் நாளை திங்கட்கிழமை (ஜூலை 2) விசாரிக்கவிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு வழங்கிய நன்கொடை தொடர்பில் சாஹிட், அந்த சவுதி அரச குடும்ப உறுப்பினரைச் சந்தித்த விவகாரம் தொடர்பிலும் அவர் விசாரிக்கப்படவிருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாக, ஸ்டார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சாஹிட் மற்றும் அவரது மனைவிக்கான பற்றுச் சீட்டுக்கான (கிரெடிட் கார்ட்) தொகை சுமார் 8 இலட்சம் ரிங்கிட்டை அறவாரியம் ஒன்று செலுத்தியிருப்பதன் தொடர்பில் அவர் மீது விசாரணை நடத்தப்படவிருப்பதாகத் தெரிகிறது. அந்த அறவாரியத்தின் தலைவரும் சாஹிட் ஆவார்.

1997-இல் பதிவு செய்யப்பட்ட அந்த அறவாரியம் ஏழ்மை ஒழிப்புக்காக நிதிகளைப் பெறுவதற்கும் விநியோகிப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.