Home உலகம் உருகுவே 2 – போர்ச்சுகல் 1 (முழு ஆட்டம்)

உருகுவே 2 – போர்ச்சுகல் 1 (முழு ஆட்டம்)

1027
0
SHARE
Ad

மாஸ்கோ – போர்ச்சுகல்-உருகுவே இடையிலான ஆட்டத்தில் 2-1 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து தங்களின் உலகக் கிண்ணக் கனவுகள் கலைந்த சோகத்தோடு போட்டிகளில் இருந்து போர்ச்சுகல் வெளியேறுகிறது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்தில் போர்ச்சுகலின் பெப்பே 55-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க 2 குழுக்களும் 1-1 என சமநிலையில் இருந்து வந்தன. ஆனால் உருகுவேயின் கவானி 62-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடிக்க தற்போது உருகுவே 2-1 என்ற நிலையில் முன்னணி வகித்து வருகிறது.

#TamilSchoolmychoice

உருகுவேயின் 2 கோல்களையும் கவானிதான் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை முதல் 16 நாடுகள் கொண்ட இரண்டாவது சுற்றுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்கியுள்ளன.

மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய உருகுவே – போர்ச்சுகல் இடையிலான ஆட்டத்தில், முதல் பாதி ஆட்டத்தில், உருகுவே 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்து வந்தது.

சனிக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் 4-3 கோல் எண்ணிக்கையில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்தது.