Home வணிகம்/தொழில் நுட்பம் இரண்டு நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட 11 நாடுகளில் முதல் கட்ட ஐ-போன்கள் விற்றுத் தீர்ந்தன!

இரண்டு நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட 11 நாடுகளில் முதல் கட்ட ஐ-போன்கள் விற்றுத் தீர்ந்தன!

745
0
SHARE
Ad

iPhone-5s-gold-featureசெப்டம்பர் 22 – உலகின் 11 நாடுகளில் மட்டும் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் திறன்பேசிகள் இரண்டே நாட்களில் அந்த நாடுகள் எல்லாவற்றிலும் விற்றுத் தீர்ந்து விட்டன என்றும், இனி அடுத்த விற்பனைக்கான விநியோகம் அக்டோபரில்தான் நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று சனிக்கிழமை இறுதிக்குள் ஐ-போன் திறன்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், ஜப்பான், பொர்ட்டோ ரிக்கோ, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் 9 வண்ண ரகங்களில் வெளியிடப்பட்ட எல்லா 5s ஐ-போன்களும் விற்று முடிந்ததாக ஆரம்ப கட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனக் கடைகளுக்கும், விற்பனை மையங்களுக்கும் குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையிலான ஐ-போன்கள் மட்டுமே விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டன.

புதிய ரக ஐ-போன்களில் பொன் நிற ரகங்கள்தான் மிகவும் பிரபலமாக இருக்கின்றன என்பதால் சில கடைகளில் அந்த நிறங்களைக் கொண்ட ஐ-போன்கள் விநியோகிக்கப்படவே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் விற்றுமுடிந்தது இந்த பொன் நிற ஐ-போன்கள்தான் என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அடுத்ததாக, 64 ஜிபி கொள்திறன் கொண்ட இளம் கறுப்பு வண்ண (Space Gray)ஐ-போன்கள் அதிகமாக நாடப்பட்டன.

பழைய ரக ஐ-போன்களில் வெள்ளி நிறம் மட்டுமே மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெள்ளி நிற ஐ-போன்கள் மட்டுமே ஆகக் கடைசியாக விற்று முடிந்த ரகங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.