Home அரசியல் அம்னோ கட்சித் தேர்தல்: மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி!

அம்னோ கட்சித் தேர்தல்: மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி!

711
0
SHARE
Ad

maxresdefault39-640x360 (1)கோலாலம்பூர், செப் 21 – இன்று நடைபெற்ற அம்னோ கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலில் மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

இதில் ஆச்சர்யமளிக்கும் வகையில் முன்னாள் துணை அமைச்சரான டத்தோ மஸ்னா மஸ்லானும்(படம்), மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

சரியாக மனுத் தாக்கல் நிறைவடையும் நேரமான 5 மணிக்கு அரைமணி நேரம் முன்னதாக வந்து மஸ்னா மனுத் தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

ஆகவே, அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் பதவிக்கு நடப்பு தலைவரான டத்தோஸ்ரீ ஷாஹ்ரிஸட் அப்துல் ஜாலில், மஸ்னா மற்றும் கூலிம் பண்டார் பாரு அம்னோ பிரிவு உறுப்பினரான ரைஹான் சுலைமான் பாலஸ்தீன் ஆகிய மூவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.