Home கலை உலகம் ஆதி எனக்கு நல்ல நண்பர் – டாப்சி

ஆதி எனக்கு நல்ல நண்பர் – டாப்சி

667
0
SHARE
Ad

செப். 23- ‘ஈரம்’ படப்புகழ் நடிகர் ஆதியும், ‘ஆடுகளம்’ புகழ் டாப்சியும் இணைந்து ‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்தில் தோன்றினார்கள்.

இந்த நட்பு திரையுலகைத் தாண்டியும் நெருங்கி வருவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

Gundello Godari StillsGundelo Godari (3)‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்தில் இருவரும் தோன்றும் ஒரு நெருக்கமான காட்சிக்குப் பின்னர் இந்த நட்பு இறுகியதாகத் தெரிகின்றது.

#TamilSchoolmychoice

ஆதியிடம் மிகவும் நெருக்கம் காட்டும் டாப்சி, சில படத் தயாரிப்பாளர்களிடமும் ஆதி குறித்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

தான் நடிக்கும் ‘முனி’ படத்திற்குப் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருக்கும் டாப்சி இந்த செய்தியை மறுக்கின்றார்.

ஆதி தனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்று கூறும் அவர் சில மாதங்களுக்கு முன்னால் ஹைதராபாத்தில் ஆதியைச் சந்தித்த பின்னர் இதுவரை வேறெங்கும் பார்க்கவில்லை என்கிறார்.

gundello-godari-movie-stills-8அதுமட்டுமின்றி இதுவரை தான் யாருடனும் நெருங்கிப் பழகவில்லை, இனியும் அதுபோல் யாருடனும் பழகமாட்டேன் என்றும் உறுதிபடத் தெரிவிக்கின்றார்.

டிசம்பர் வரை தனக்குத் தேதிகள் இல்லாததினால் தெலுங்குப்பட ஒப்பந்தம் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லும் டாப்சி இந்திப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

விரைவில் அந்தப் படத்திற்கான ஒத்திகையில் ஈடுபடப் போவதாகக் கூறிய அவர் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிப்பு வரும்வரை தான் வேறு எதுவும் கூற இயலாது என்றார்.

இதுகுறித்த தகவல் பெற நடிகர் ஆதியை அணுக முடியவில்லை.