Home கலை உலகம் ‘ஆப்பிள் பெண்ணே’ படத்திற்காக பாடகியானார் ரோஜா

‘ஆப்பிள் பெண்ணே’ படத்திற்காக பாடகியானார் ரோஜா

659
0
SHARE
Ad

செப். 23- கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் கே.ஜி.பாண்டியன் தயாரிக்கும் புதிய படம் ‘ஆப்பிள்பெண்ணே’.

இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மற்றும் ரோஜா, தம்பி ராமைய்யா, கே.ஜி.பாண்டியன், தேவா, சுசித்ரா, சுரேஷ், ஆகியோர் நடிக்கிறார்கள்.

apple-penne-cinema-032இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.கே.கலைமணி. படம் குறித்து இவர் கூறும்போது,

#TamilSchoolmychoice

‘ஆப்பிள் பெண்ணே’ ஒரு தாய்க்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை ரோஜா – ஐஸ்வர்யா மேனனை வைத்து சொல்லுகிறோம். படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்களை வைத்து  பயங்கரமாகவும் ஆர்வமாகவும் படத்தை உருவாக்கியுள்ளோம்.

தம்பி ராமையா அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

தயாரிப்பாளர் கே.ஜி.பாண்டியன் திரைக்கதையில் ஆர்வத்தை  ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் ரோஜா ஒரு பாடல் பாடுகிறார். இந்த பாடல் உணவே மருந்து… மருந்தே உணவு என்ற கருத்தை சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு காய்கறி, பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் உள்ளது என்பதை தெளிவாக இந்த பாடலில் சொல்லி இருக்கிறோம். இது பாடலாக மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் பாடமாகவும் இருக்கும் என்றார்.

இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை ஸ்டெடிகெம் பிரபாகர் கவனிக்கிறார். பாடல்களை யுகபாரதி, விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர்.