Home அரசியல் தேச நிந்தனை வழக்கு – தியான் சுவா விடுத்த மனு நிராகரிக்கப்பட்டது

தேச நிந்தனை வழக்கு – தியான் சுவா விடுத்த மனு நிராகரிக்கப்பட்டது

777
0
SHARE
Ad

Tian-Chuaகோலாலம்பூர், செப் 26 – லஹாட் டத்து விவகாரத்தில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தன் மீது உள்ள குற்றச்சாட்டை நீக்கும் படி தியான் சுவா விடுத்த கோரிக்கையை, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அமீலியா டி அப்துல்லா இன்று நிராகரித்தார்.

தேச நிந்தனை வழக்கு நீக்கப்படும் வரை இவ்வழக்கு சட்டத்துறை மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், காரணம் அரசாங்கம் தேச நிந்தனை சட்டத்தை அகற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்துவருவதாக பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார் என்றும் நீதிபதி அமீலியா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சபாவில் லகாட் டத்து ஊடுருவல் குறித்து கடந்த மார்ச் மாதம் தியான் சுவா வெளியிட்ட அறிக்கையில், மக்களிடன் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப அம்னோ செய்யும் சதி தான் லகாட் டத்து ஊடுருவல் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தியான் சுவா மீது தேச நிந்தனை சட்டம் 1948, பிரிவு 4(1) ன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.