Home கலை உலகம் நடிகை நீது சந்திரா வாங்கிய 5 ஏக்கர் நிலம்: பண்ணை வீடு, விளையாட்டு அரங்கம் கட்டுகிறார்

நடிகை நீது சந்திரா வாங்கிய 5 ஏக்கர் நிலம்: பண்ணை வீடு, விளையாட்டு அரங்கம் கட்டுகிறார்

762
0
SHARE
Ad

செப். 28- மாதவன் ஜோடியாக ‘யாவரும் நலம்’ பேய் படம் மூலம் தமிழில் அறிமுக மானவர் நீதுசந்திரா.

விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தார்.

neetu-chandra630‘யுத்தம் செய்’ படத்தில் கன்னி தீவு பெண்ணா பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார்.

#TamilSchoolmychoice

நீதுசந்திரா சம்பாதித்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளார். மும்பை நகருக்கு வெளியே 5 ஏக்கரில் நிலம் வாங்கியுள்ளார்.

இதில் பண்ணை வீடு மற்றும் விளையாட்டு அரங்கம் கட்டுகிறார். இதுகுறித்து நீதுசந்திரா கூறும்போது ”எனது தாய்க்கு பண்ணை வீடு ஒன்று கட்ட வேண்டும் என்பது கனவாக இருந்தது.

அமைதியான சூழ்நிலை நிலவும் பசுமையான இடத்தில் இந்த வீட்டை கட்ட ஆசைப்பட்டார். அதற்காகத்தான் இந்த நிலத்தை வாங்கியுள்ளன். இதில் பண்ணை வீடு ஒன்று விரைவில் கட்டப்படும்.

எனக்கு கூடைப்பந்து விளையாட்டு பிடிக்கும். இந்த இடத்தில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கமும் கட்டப்படும்” என்றார்.