Home இந்தியா சோனியா காந்தி இன்று கர்நாடகம் வருகை

சோனியா காந்தி இன்று கர்நாடகம் வருகை

509
0
SHARE
Ad

பெங்களூர், செப்.30- பெங்களூர் புறநகர், மண்டியா ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

sonia_gandhi_loஇந்த நிலையில் அந்த 2 தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார்.

மண்டியாவில் உள்ள சர்.எம்.விசுவேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் பகல் 2 மணிக்கு நடைபெறும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியா கலந்து கொண்டு பேசுகிறார்.

#TamilSchoolmychoice

இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் வரும் சோனியா காந்தி அங்கிருந்து  உலங்கு வானூர்தியில்  தூபினகரே பகுதிக்கு வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் மண்டியாவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை வந்து அடைகிறார்.