Home இந்தியா பா.ஜ.க. தேர்தல் பிரசார குழு தலைவராக ராஜ்நாத் சிங் தேர்வு

பா.ஜ.க. தேர்தல் பிரசார குழு தலைவராக ராஜ்நாத் சிங் தேர்வு

539
0
SHARE
Ad

புதுடெல்லி, செப். 30- புதுடெல்லியில்  நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் இதுவரை குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி வகித்துவந்த தேர்தல் பிரசார குழு தலைவர் பதவிக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

Modi_rajnath2014 – பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நரேந்திர மோடியை பா.ஜ.க. மேலிடம் கடந்த 13ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதனையடுத்து, இதுவரை மோடி வகித்து வந்த தேர்தல் பிரசார குழு தலைவர் பதவிக்கு வேறொருவரை நியமிப்பதற்காக பா.ஜ.க. பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் கூட்டம் புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

#TamilSchoolmychoice

பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், பா.ஜ.க. பொதுச் செயலாளர் அனந்த் குமார், நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் பிரசார குழு தலைவராக பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல் பிரசார குழு தலைவராக மோடி பதவி வகித்த போதே 20 தேர்தல் பிரசார துணை கமிட்டிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் பல்வேறு மூத்த தலைவர்கள் இடம் பெற்றிருப்பதால் மேலிட தலைவர் பதவிக்கு ராஜ்நாத் சிங் தான் பொருத்தமானவர் என பா.ஜ.க. பொதுச்செயலாளர் அனந்த் குமார் தெரிவித்தார்.