Home அரசியல் என் மீது ஏன் பழி போடுகிறீர்கள்? தோல்விக்குக் காரணம் எங்களின் கறை படிந்த தலைவர் –...

என் மீது ஏன் பழி போடுகிறீர்கள்? தோல்விக்குக் காரணம் எங்களின் கறை படிந்த தலைவர் – மசீச கட்சி துணைத்தலைவர்

604
0
SHARE
Ad

Liow Tiong Laiகோலாலம்பூர், அக் 2 – நடந்து முடிந்த மே 5 போதுத்தேர்தலில், மசீச கட்சியின் பின்னடைவிற்கு தன்னை யாரும் குறை சொல்ல வேண்டாம் என்றும், அதற்கு கட்சியின் தேசியத் தலைவர் சுவா சொய் லெக்கின் ஆபாச காணொளி தான் காரணம் என்றும் துணைத்தலைவர் ஆன லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய லியாவ், “பொதுத்தேர்தலில் மசீச விற்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட காரணம் ஒழுக்கத்தில் கறை படிந்த கட்சியின் தலைவரால் தான்” என்று தெரிவித்தார்.

நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில், தேர்தல் குழுவின் தலைவராக இருந்த லியாவ், சரியாக பணியாற்றவில்லை என்றும், சக வேட்பாளர்களுக்காக பிரச்சாரங்கள் செய்யவில்லை என்றும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இது குறித்து கருத்து தெரிவித்த லியாவ், “என்னை ஏன் கேட்கிறீர்கள்?… சுவாவின் ஆபாச காணொளி பற்றி கேளுங்கள்? வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த போது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். அதற்குக் காரணம் எங்கள் ஒழுக்கமில்லாத தலைவர்” என்று லியாவ் குறிப்பிட்டார்.

“அதையெல்லாம் விட கொடுமையான பிரச்சாரம் செய்யப் போன எங்களிடம் சுவாவின் ஆபாச குறுந்தட்டு தருமாறு சிலர் கேட்டார்கள்” என்று வருத்தத்துடன் லியாவ் தெரிவித்தார்.