Home கலை உலகம் இயக்குநர் சேரனின் பார்வையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’

இயக்குநர் சேரனின் பார்வையில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’

627
0
SHARE
Ad

M_Id_412530_Cheranஅக்டோபர் 2 – இயக்குநர் மிஷ்கினின் படைப்பில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இந்த படம் கடந்த வாரம் வெளியிடப்பட்டு தற்போது மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா பின்னணி இசையமைத்துள்ள இந்த படம், வித்தியாசமான கதைக்களத்துடன் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்த படம் குறித்து இயக்குநர் சேரன் கூறுகையில், “எனக்கு நல்ல கதை கொண்ட படம் பிடிக்கும். மக்களுக்கு எதையாவது உணர்த்தும் படமாக இருந்தால் மிகவும் பிடிக்கும். காரணம் சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஊடகம். அதை வைத்து எல்லா நல்ல விஷயங்களையும் கூற முடியும். அதே நேரத்தில் எல்லா கெட்ட விஷயங்களையும் கற்றுக்கொடுத்த இந்த சமூகத்தைக் கெடுக்க முடியும். அந்த வகையில் இந்த படம் ஒரு புதுமையான முயற்சி. ஒரு இயக்குநராக எனக்கு ஒரு நல்ல படத்தை எடுக்கக்கூடிய வலி தெரியும்.

#TamilSchoolmychoice

ஒரு நல்ல படத்தை கொடுக்கப்பட்ட பட்ஜட்டிற்குள் எடுத்து முடிக்க ஒவ்வொரு இயக்குநரும் 10 தாயின் பிரசவ வலியினை சுமக்கிறான். அதையும் மீறி தனது மனதில் இருக்கும் அந்த கதையை  ஒரு படமாகக் கொண்டு வருகிறான். அப்படிப்பட்ட ஒரு படமாகத் தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை நான் பார்க்கிறேன். மிஷ்கினின் அயராத உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்க வேண்டும். அனைவரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போன்று இயக்குநர் சேரனின் வித்தியாசமான முயற்சியில் “ஜேகே எனும் நண்பனின் கதை” என்ற படம் விரைவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கப் போகிறது. உறவுகளையும், அதற்குள் இருக்கும் ஆழமான அன்பையும் மிகச் சிறப்பாக படமெடுத்துக் காட்டும் சேரன் அவர்களின் இந்த வித்தியாசமான படைப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

“ஜேகே எனும் நண்பனின் கதை” படத்தின் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழையே இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் பேஸ்புக் வடிவில் வித்தியாசமாக வடிவமைத்து அனைவரையும் ரசிக்க வைத்தார் இயக்குநர் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

– பீனிக்ஸ்தாசன்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பற்றி சேரனின் கருத்துக்களை கீழ்காணும் இணைய வழி தொடர்பின் மூலம் காணலாம்