Home நாடு குற்றத்தடுப்பு சட்ட திருத்தம் (2013) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

குற்றத்தடுப்பு சட்ட திருத்தம் (2013) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

463
0
SHARE
Ad

Feature-Parlimen-Buildingகோலாலம்பூர், அக் 3 – குற்றத்தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களான விசாரணையின்றி தடுத்து வைத்தல் மற்றும் குற்றங்களுக்கு எதிராக தற்காத்தல் ஆகியவை நாடாளுமன்றத்தில் இன்று காலை நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்திருத்தத்தை எதிர்த்து எதிர்கட்சிகள் எவ்வளவோ குரல் கொடுத்தும், அதிக அளவு அரசு ஆதரவாளர்கள் இருந்ததால் இறுதியில் அதிகாலை 12.50 மணியளவில் அச்சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது.

கடந்தவாரம் புதன்கிழமை இச்சட்டத்திருத்தத்திற்கான மனுவை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது முதல் வாசிப்பு நடைபெற்றது.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், நேற்று இரண்டாவது வாசிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இச்சட்டதிருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.