Home இந்தியா லாலுவுக்கு என்ன தண்டனை? இன்று அறிவிப்பு

லாலுவுக்கு என்ன தண்டனை? இன்று அறிவிப்பு

519
0
SHARE
Ad

Lalu-Prasad-Yadavபுதுடில்லி, அக் 3 – மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது.

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் முதல்வராக இருந்த கால கட்டத்தில் மாட்டுத்தீவன வழக்கில் சுமார் 950 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வழக்கை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது.

கடந்த 17 ஆண்டுகளாக 53 பிரிவுகளாக இவ்வழக்கு பிரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி லாலு பிரசாத் யாதவ், மாநிலத்தின் முனனாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா, ஜெகதீஷ்சர்மா உட்பட 42 பேர் குற்றவாளிகள் என நீதிபதி பிரவாஸ் குமார் தீர்ப்பு வழங்கினார்.

#TamilSchoolmychoice

தீர்ப்பு வழங்கப்பட்ட உடன் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அளிக்கப்பட உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய அதிரடி உத்தரவின் அடிப்படையில் 2 ஆண்டுகள் மறறும் அதற்கு மேல் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டால் லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.அதுமட்டுமல்லாது தொடர்ந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட இயலாத சூழ்நிலை உருவாகும்.

இதனிடையே ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மு்ன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சி்கிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டுள்ளார்.