Home இந்தியா ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் – திருநாவுக்கரசர்

ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் – திருநாவுக்கரசர்

638
0
SHARE
Ad

rahul-gandhi1திருச்செங்கோடு, அக் 8 –  தமிழகத்தில், சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,” என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ணகவுண்டரை சந்திப்பதற்காக, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், திருச்செங்கோடு வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், “லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து, தேர்தல் நேரத்தில் தான் முடிவு தெரியும். பிரதமர் வேட்பாளர் ராகுல், என அறிவிக்கப்படவில்லை என்றாலும், ராகுலை முன் நிறுத்தி, காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை கொலை, கொள்ளை சம்பவங்களை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நாமக்கல்லில் கட்சியினரை சந்தித்து, கட்சியின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். மாவட்டத் தலைவர் சுப்ரமணியம், வக்கீல் பிரிவு அணி மாவட்டத் தலைவர் தனபால், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் பொன்னுசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வகுமார், நகர தலைவர் தங்கவேல், லோக்சபா துணைத் தலைவர் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.