Home கலை உலகம் தூக்கமின்றி இரவு பகலாக பணியாற்றும் இசையமைப்பாளர்!

தூக்கமின்றி இரவு பகலாக பணியாற்றும் இசையமைப்பாளர்!

589
0
SHARE
Ad

Vijay-Antony-in-a-still-from-the-Tamil-movie-Naanசென்னை, அக் 8 – நான் படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் சலீம். அவரது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து ஸ்டூடியோ 9, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் நிறுவனங்களும் தயாரிக்கிறது.

சென்னையை சுற்றிலும் கடந்த 40 நாட்களாக இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இரவில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு பகலில் படத்துக்கு இசை அமைக்கிறார் விஜய் ஆண்டனி.

இரவில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் இவரது கேரவன் (அனைத்து வசதிகளும் நிறைந்த வாகனம்) நிறுத்த முறையான அனுமதி கிடைக்காததால், விஜய் ஆண்டனி அருகில் சாலை ஓரத்தில் துணியை விரித்து படுத்துக் கொண்டாராம்.

#TamilSchoolmychoice

இப்படியே 40 நாட்கள் தொடர்ச்சியாக சரியாக தூங்காததால் இப்போது விஜய் ஆண்டனிக்கு உடல்ரீதியான பிரச்னைகள் உருவாகி இருக்கிறதாம்.