Home நாடு குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை! – சாஹிட் ஒப்புதல்

குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை! – சாஹிட் ஒப்புதல்

567
0
SHARE
Ad

zahid featureகோலாலம்பூர், அக் 8 – குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.. சுட வேண்டாம்…என்று அரசு சாரா இயக்கங்கள் காவல்துறைக்கு எதிராகப் பல ஆண்டுகளாகக் கூறி வந்தாலும், குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இவ்விவகாரம் ஒருபுறம் இருக்க உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி கடந்த சனிக்கிழமை விடுத்த அறிக்கையில், குற்றவாளிகளை முதலில் சுடுவது, அதன் பின்னர் விசாரணை செய்வது தான் சரி என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பாதுகாப்பு குறித்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட சாஹிட், அங்கு செய்தியாளர்கள் இருப்பதை அறியாமல் பல உண்மைகளை உளறிக் கொட்டினார் என்றும், பின்னர் செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்தவுடன் தான் கூறியவற்றை பிரசுரிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

மலாக்கா, ஆயர் குரோ, அனைத்துலக வாணிக மையத்தில் சாஹிட் ஆற்றிய உரையில், குண்டர் கும்பல் என்று அடையாளம் காணப்பட்ட 40,000 பேரில் 28,000 க்கு மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் அவர்களைக் கைது செய்வதில் தவறேதும் இல்லை என்றும் சாஹிட் கூறியுள்ளார்.

“இந்த குண்டர் கும்பலால்  மலாய் இனத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர், திருடப்பட்டுள்ளனர். இதற்கு என்ன தான் தீர்வு? இனி அந்த குண்டர்களை விட்டு வைக்கக்கூடாது. குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டால் சுட்டுத்தள்ள வேண்டியது தான்” என்று சாஹிட் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்களை மலேசியாகினி இணையத் தள செய்திப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.