“அது என் மகன் வாங்கியது. எனக்கு சம்பந்தமில்லை. எனது பிரச்சனையுமில்லை” என நஸ்ரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் அந்த சொத்தில் நஸ்ரியின் மனைவியும் ஒரு கூட்டுப் பங்குதாரர் என்று நஸ்ரியின் புதல்வர் நெடிமின் காதலியும் நடிகையுமான டேனிஷ் நோரா தற்போது தெரிவித்திருக்கின்றார்.
சொலிடாரிடி அனாக் முடா மலேசியா (Solidariti Anak Muda Malaysia) என்ற பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய அரசு சாரா இயக்கம், நஸ்ரியின் மகன் எவ்வாறு இவ்வளவு விலையுடைய ஆடம்பர மாளிகையை வாங்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்ததோடு, தக்க ஆதாரங்களுடன் அந்த மாளிகை குறித்த ஆவணங்களையும் வெளியிட்டிருந்தது.
நெடிம் தற்போது நஸ்ரியின் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற தொகுதியில் இளைய சமுதாயத்தினருக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார். ஏற்கனவே, அவர் நஸ்ரியின் சுற்றுலாத் துறை அமைச்சில் அதிகாரபூர்வ பணியாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததும் நாட்டில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் அவர் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பணியாளர் அல்ல என அரசு தரப்பபில் விளக்கம் தரப்பட்டது.
கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய ஒரு வர்த்தகரான மைக்கல் சியா என்பவரின் பெயரில் உள்ள ஓர் ஆடம்பரக் காரை நெடிம் ஓட்டிக் கொண்டிருக்கின்றார் என்ற தகவல் பத்திரிக்கைகளில் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.