Home நாடு சாஹிட்டின் வரம்பு மீறிய கருத்துக்கள் – தேச நிந்தனை சட்டம் பாயலாம் – வழக்கறிஞர் மன்றம்...

சாஹிட்டின் வரம்பு மீறிய கருத்துக்கள் – தேச நிந்தனை சட்டம் பாயலாம் – வழக்கறிஞர் மன்றம் கருத்து

510
0
SHARE
Ad

Christopher Leongகோலாலம்பூர், அக் 9 –   மலாக்காவில் பாதுகாப்பு குறித்த விழா ஒன்றில் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி எல்லை மீறி பேசிவிட்டதாகவும், அவர் மீது தேச நிந்தனை சட்டம் பாய வாய்ப்புள்ளது என்றும் மலேசிய வழக்கறிஞர் மன்றம் கருதுகிறது.

வழக்கறிஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டோபர் லியாங்(படம்) இது குறித்து கூறுகையில், “ சாஹிட்டின் அறிக்கை நாட்டிற்கு பெரிய அவமதிப்பையும், இழிவையும் தேடித் தந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உள்துறை அமைச்சரான சாஹிட் ஒரு பொதுவிழாவில் இவ்வாறு சட்டத்திற்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டதற்கு வழக்கறிஞர் மன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. அவரது அறிக்கை காவல்துறை வரம்பு மீறிய அதிகாரத்தை கையில் எடுப்பது போல் இருக்கிறது. எனவே சாஹிட் கூறிய கருத்துக்கள் தேச நிந்தனைக் குற்றச்சாட்டுக்குச் சமமானவை” என்றும் லியாங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமை பாதுகாப்பு குறித்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சாஹிட்,“காவல்துறை முதலில் சுடுவார்கள் பின்னர் தான் விசாரணை செய்வார்கள். குற்றத்தடுப்பு சட்டத்தில் செய்யப்படும் திருத்தம் மூலம் விசாரணையின்றி தடுத்து வைக்கலாம். சரியான ஆதாரங்கள் இல்லாத பட்சத்திலும் சந்தேகப்படும் நபர்களை இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்கலாம்” என்பது போன்று பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளார்.

மேலும், குண்டர் கும்பல்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்றும், இதற்கு மேல் காவல்துறை அவர்களை விட்டுவைக்கப்போவதில்லை என்றும் சாஹிட் கூறியுள்ளார். தான் கூறிய கருத்துக்களை செய்தியாளர்கள்  பிரசுரம் செய்தால் அந்த நாளேடுகளையே மூடிவிடுவேன் என்றும் சாஹிட் கூறியதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன.