Home இந்தியா நடிகர் எஸ்.வி.சேகர் பாஜக வில் இணைந்தார்!

நடிகர் எஸ்.வி.சேகர் பாஜக வில் இணைந்தார்!

580
0
SHARE
Ad

22-sv-sekar5-600சென்னை, அக் 9 – தமிழகத்தின் பிரபல நடிகரும் முன்னாள் எம்எல்ஏ வுமான எஸ்.வி.சேகர் பாஜகவில் இணைந்தார். அதிமுகவில் சேர்ந்து மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர் பின்னர் காங்கிரஸில் இருந்து விலகினார்.

இடையில் சில காலம் எந்தக் கட்சியையுடனும் சாராமல் இருந்த எஸ்.வி.சேகர், சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரிடம் வாழ்த்தும், வாழ்த்துக் கடிதமும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மோடியின் ஆசியுடன் நேற்று பிற்பகல் 12.15 க்கு பாஜக-வில் சேர்ந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல கணேசன் உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்தினார்.

#TamilSchoolmychoice

இது குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், “நரேந்திர மோடியின் ஆசியுடன் தான் பாஜக வில் சேருகிறேன். கட்சியின் தமிழ் மாநில தலைவர் பொன் ராதாகிருக்ஷ்ணன் எனக்கு உறுப்பினர் அட்டை வழங்குகிறார். எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை. இருக்கும் இடத்துக்கு என்னால் என்றுமே நன்மை தான் உண்டாகுமே தவிர கெட்ட பெயரை உண்டாக்கமாட்டேன். இதுவரை நான் இருந்த கட்சிகளில் எனக்கு யார் மீதும் வருத்தமில்லை. என் மீதும் யாருக்கும் வருத்தமிருக்காது. நரேந்திர மோடியின் தலைமை தான் இன்று நாட்டுக்கு தேவை என்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த நாடும் இப்போது உணர்ந்து வருகிறது,” என்றார்.