Home கலை உலகம் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இயக்குநர் சேரன்

‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இயக்குநர் சேரன்

618
0
SHARE
Ad

jk-enum-nanbanin-vaazhkai-Movie-Forst-Look-Poster-011

அக்டோபர் 10 –  ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்து அதை விரைவில் வெளியிடக்காத்திருக்கும் இயக்குநர் சேரன், அப்படத்தை வெளிநாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இது குறித்து சேரன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கூறுகையில்,  “ஜே.கே படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறேன்.தமிழர்களும் தமிழ் உறவுகளும் உலகம் முழுக்க பரவி கிடக்கிறது.

#TamilSchoolmychoice

எங்கெல்லாம் திரையிட முடியும் என்றும் யார் யார் இதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் விவரங்கள் சேகரிக்கிறேன்.தாங்கள் வாழும் நாடுகளில் இடங்களில் என்னுடைய படத்தை திரையிட விருப்பமுள்ள நண்பர்கள் எனக்கு தொடர்பு கொள்ளலாம்.

இது வியாபாரமே.அதற்கான தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.சில நாடுகளில் மட்டுமே இப்போது திரையிடப்படுகிறது.

இம்முயற்சியில் புதியவர்களையும் எதிர்பார்க்கிறேன்.படம் தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் திரைக்கு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் மிகச் சிறப்பாக இசையமைத்துள்ளார். அப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் முன்னோட்டத்தையும் தற்போது சேரன் யூடியூப் வலைத்தளத்தில் தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

அப்பாடல்காட்சியின் முன்னோட்டத்தை கீழ்காணும் இணைய வழித்தொடர்பின் மூலம் காணலாம்.

-பீனிக்ஸ்தாசன்

please install flash