Home இந்தியா தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை – மன்மோகன், சோனியாவுக்கு விஜயகாந்த் கடிதம்

தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை – மன்மோகன், சோனியாவுக்கு விஜயகாந்த் கடிதம்

596
0
SHARE
Ad

120326061730_Vijayakanth-1அக்டோபர் 10 – மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

இதே கடிதத்தை மக்களவைத் தலைவர் மீராகுமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கும் விஜயகாந்த் அனுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை அக்டோபர் 6ஆம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்தார். அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் உள்பட தேமுதிகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.

#TamilSchoolmychoice

அப்போது தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தார்.

இந்த மனுவையும் தன் கடிதத்தோடு இணைத்து மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜயகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.