மசீச கட்சிக்குச் சொந்தமான அந்நாளேடு, கட்சித் தலைவர் சுவா சொய் லெக், துணைத்தலைவர் லியாவ் பற்றிக் கூறியிருந்த அறிக்கையை இன்று வெளியிட்டது.
இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளான லியாவ், தன்னைப் பற்றிக் கூறிய ஸ்டார் பத்திரிக்கை சுவாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று லியாவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது அதிகம்… உண்மையில் மிக அதிகம்… அந்த நாளேடு என்னைப் பற்றி அவதூறு பரப்பியிருக்கிறது.”
“என் மீது கொண்ட வெறுப்பின் காரண்மாக சுவா என்னைப் பற்றி மிக அவதூறு பரப்புகிறார். அவருக்கு உதவி செய்யும் ஸ்டார் நாளேடு பத்திரிக்கை தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும்.” என்று லியாவ் தெரிவித்துள்ளார்.