Home தொழில் நுட்பம் 2014-இல் சாம்சங் கேலக்ஸி S5 ?

2014-இல் சாம்சங் கேலக்ஸி S5 ?

690
0
SHARE
Ad

samsung-galaxy-s5-rumorஅக் 14- சாம்சங் நிறுவனம் வரும் ஜனவரி  2014 தொடக்கத்தில் தனது புதிய தயாரிப்பான சாம்சங் கேலக்ஸி S5 திறன்பேசியை வெளியிடவுள்ளதாக சில தென் கொரிய ஊடகங்கள்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் கடந்த மே 2012 தொடங்கி ஏப்ரல் 2013 வரை சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S3 மற்றும் S4 ஆகிய திறன்பேசிகளை சந்தையில் விற்பனைக்கு கொண்டு  வந்தது.

இந்நிலையில் சாம்சன்  S4 திறன்பேசி சந்தையில் நல்ல விற்பனையைக் கொண்டிருந்தாலும்கூட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சாம்சங் கேலக்ஸி S5  வெளியீடு காணப்படவுள்ளதாக தென் கொரியா ஊடங்கள் தெரிவிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பரில் ஐபோன் 5S-ஐ அறிமுகப்படுத்தியதால் தனது விற்பனை குறைந்து விடுமோ என்று அஞ்சி சாம்சங் நிறுவனம் இந்த S5-ஐ வெளியிடவிருப்பதாகவும் சில மறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.