Home நாடு “தீர்ப்பை ஏற்காத கிறிஸ்தவர்கள் வேறு நாட்டிற்குச் செல்லலாம்” – இஸ்மா கருத்து

“தீர்ப்பை ஏற்காத கிறிஸ்தவர்கள் வேறு நாட்டிற்குச் செல்லலாம்” – இஸ்மா கருத்து

584
0
SHARE
Ad

Isma1கோலாலம்பூர், அக் 15 –  ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அப்படி அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று இக்காதான் முஸ்லிம் மலேசியா (இஸ்மா) என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

“மலேசிய குடிமக்களாக இருந்தால் அவர்கள் இந்த நாட்டின் இஸ்லாம் மதத்தை புரிந்து அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும். இஸ்லாமின் மேலாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

அவ்வாறு அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வேறு நாட்டிற்கு செல்லலாம்” என்று இஸ்மா தலைவர்  அப்துல்லா ஸைக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.