Home தொழில் நுட்பம் அக்டோபர் 22ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-பேட் அறிமுகம்?

அக்டோபர் 22ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-பேட் அறிமுகம்?

779
0
SHARE
Ad

bigger-iphone-ipadஅக்டோபர் 16- அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி எதிர்வரும் அக்டோபர் 22ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் தனது புதிய கருவிகளின் அறிமுக விழாவிற்கான பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு பிரமுகர்களுக்கான அழைப்பிதழ்களை ஆப்பிள் நிறுவனம் அனுப்பத் தொடங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

இதன்மூலம், எதிர்வரும் அக்டோபர் 22ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 7 செயலி மென்பொருளுடன் கூடிய புதிய தட்டைக் கணினியும் (ஐ-பேட்) புதிய மேக்புக் புரோ எனப்படும்  கணினி ரகங்களும் அறிமுகம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வழக்கமாக ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள்-மென்பொருள்களுக்கான அறிமுக விழாக்களுக்கான அழைப்பிதழ்களில் எதற்காக அறிமுக விழா என்பது போன்ற விவரங்களை அந்த நிறுவனம் தெரிவிக்காமல் வைத்திருப்பதை தனது வணிகக் கலாச்சாரமாக அது கொண்டுள்ளது.

எனவே, இந்த முறையும் அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் விழா எதற்கு என்பதற்கான விவரங்கள் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தொழில் நுட்ப வட்டாரங்களில் புதிய தட்டைக் கணினிக்கான அறிமுக விழா இது என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.