Home இந்தியா 1,000 வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டேன்: விஜயகாந்த் ஆவேசம் !

1,000 வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டேன்: விஜயகாந்த் ஆவேசம் !

535
0
SHARE
Ad

120326061730_Vijayakanth-1

சென்னை, அக் 17- “மக்களுக்காக, மக்கள் பிரச்னைகளுக்காகத் தான் பேசுகிறேன். இதற்காக 1,000 அவதூறு வழக்குகள் போட்டாலும் அதை கண்டு நான் பயப்படமாட்டேன்,” என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை இஸ்லாமியர்களுக்கு குர்பானி வழங்கும் விழா நடந்தது.

#TamilSchoolmychoice

இதில் பங்கேற்று குர்பானி வழங்கி அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது , அனைவருக்கும் கோபம் வருவது இயற்கை. நான் கோபப்படுவதாக கூறுகின்றனர். எனக்கு மேடை நாகரிகம் இல்லை என்கின்றனர். நான் குடித்து விட்டு பேசுவதாகவும் கூறுகின்றனர்.நான் மனதில் பட்டதை மட்டுமே பேசுவேன். மற்றவர்களை போல, எழுதி வைத்துக்கொண்டு பேசி மக்களை ஏமாற்ற மாட்டேன். செய்கிற தப்பையெல்லாம் அவர்கள் செய்துவிட்டு, என் மீது பழியை போடுகின்றனர். இரண்டு கட்சிகளும், என்னைப் பற்றி தவறாக சொல்லி, மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர். நான், பேசுவதில் தவறு இருந்தால், மக்கள் தான் மன்னிக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மாற்றுவதற்கு காரணம் பலருக்கும் தெரியாது. கோபப்படுவதால் தான் அவர்களை அடிக்கடி மாற்றுகிறார்.மக்களுக்காகவும் மக்கள் பிரச்னைக்காகவும் தான் நான் பேசுகிறேன். இதற்காக, என் மீது அவதூறு வழக்குகள் போடுகின்றனர். 1,000 வழக்குகள் போட்டாலும் அதைக்கண்டு நான் பயப்படமாட்டேன்.சில அரசியல்வாதிகள்  ஜாதி மதத்தை கையில் வைத்துக்கொண்டு  எதையாவது சொல்லி மக்களை ஏமாற்ற பார்ப்பர். அவர்களை சுற்றி இருக்கும் 100 பேர் மட்டுமே நன்றாக இருப்பர். அவர்களால் மற்றவர்களுக்கு எந்த பலனும் இருக்காது.

கடந்த ஆட்சியில் என் மண்டபத்தை இடித்தனர். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால் படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க என்னால் முடியும். கட்சியை ஆரம்பிக்கவும் நடத்துவதற்கும் நான் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறேன் என்பது எனக்குதான் தெரியும். தேர்தல் வந்துவிட்டதால் தவறு செய்தவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என்று  விஜயகாந்த் ஆவேசப்பட்டார்.