Home கலை உலகம் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வல்

கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வல்

706
0
SHARE
Ad

big_Kajal_not_to_share_screen_with_Kamal-e11c2a4ad397959e0ab54416f5975ddf

சென்னை, அக் 21- ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த காஜல் அகர்வால் இப்போது சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு கமல் அடுத்ததாக உத்தம வில்லன்  என்ற படத்தில் நடிக்கிறார். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

நடிகரும் கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் தமிழில் முதல் முறையாக இயக்கும் படம் இது. ஏற்கெனவே கமலை வைத்து ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில்  இயக்கியிருந்தார்.

படத்திற்கு கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் கமலுக்கு ஜோடி காஜல் அகர்வால் என்பதை இப்போதுதான் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் காஜல். செப்டம்பரில் நிறைய படம் கைவசம் கொண்டிருந்த காஜல் இப்போது கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால் இப்போது படம் நவம்பர் – டிசம்பருக்கு தள்ளிச் சென்றிருப்பதால் சம்மதம் தெரிவித்துள்ளார்  காஜல்.