Home நாடு சுலு சுல்தான் ஜமாலுல் கிராம் காலமானார்!

சுலு சுல்தான் ஜமாலுல் கிராம் காலமானார்!

589
0
SHARE
Ad

Sulu-Sultan-Jamalul-kiram-Sliderகோலாலம்பூர், அக் 21 – கடந்த பிப்ரவரி மாதம் சபா மாநிலத்தை ஆக்கிரமிக்க தனது படைகளை அனுப்பிய சுலு சுல்தான் ஜமாலுல் கிராம் (வயது 75) நேற்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் காலமானார்.

மணிலாவில் உள்ள நிபுணத்துவ மருத்துவமனை ஒன்றில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து மரணமடைந்ததாக அவரது மகள் ஜெசல் கிராம் பிலிப்பைன்ஸ் என்குயரர் பத்திரிக்கை வாயிலாக அறிவிப்பு விடுத்துள்ளார்.

அந்த பத்திரிக்கையில் ஜெசல் கிராம் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“என் தந்தை தொடங்கியவற்றை நாங்கள் தொடர்ந்து செய்வோம். சபா மாநிலத்தை பிலிப்பினோக்களுக்கு குறிப்பாக சுலு மக்களுக்கு மீட்டுத் தருவோம். என் தந்தையின் போராட்டத்தை நாங்கள் இனி தொடர்ந்து நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

சபாவில் உள்ள லஹாட் டத்து பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் அத்துமீறி நுழைந்த சுலு படையினர், மலேசிய ராணுவத்துடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

மலேசியப் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.